வாட்ச் மெக்கானிக்
வாட்ச் மெக்கானிக்
பொங்கல் கொண்டாட்டத்தின் உற்சாக மூடுபனி, உடைந்த என் வாட்சின் வலியை மூடி மறைத்து விட்டது. இறந்த இயேசு கிறிஸ்து கூட 3 நாளில் உயிர் தெழுந்தார், என் வாட்ச் ஓ உயிர் தெழ 1 மாதம் எடுத்து கொண்டது.
ஒரு மாதம் கழித்து..... வாட்ச் சேவை கடையில்,
குங்குமமும் திருநீறும் ஒரு சேர அழகாய் நெற்றியில் பதிந்த முகம், பத்து வருட பழைய வெளுத்து போன சட்டை (மூன்றாவது பட்டன் ஓட்டையில் பட்டனுக்கு பதில் சேப்டி பின் இருந்தது) ராசி கல் மோதிரம் என "கடைசி விவசாயி விஜய் சேதுபதி யை நினைவூட்டினார் வாட்ச் மெக்கானிக்.
பழைய கடிகாரத்தை சரி செய்து கொண்டிருக்கும் அவரது பக்குவம், மெக்கானிக் ஐ தாண்டி வாட்ச் டாக்டர் ஆக மாற்றிவிட்டது அவரை. எனது இறந்த வாட்சை உயிர்ப்பித்து தருமாறு கேட்ட போது, யாசகர்களின் வேண்டுதல்களை மதிக்காத இறைவனை போலவே என் வேண்டுதலையும் மறுத்து விட்டார். ஆனால் வேறொரு வாட்ச்சிற்கு உயிர் பிச்சை அளித்து கொண்டிருந்தார்(ப்ரீமியம் தரிசனமாக இருக்கக்கூடும்). ஆனால், இறைவன் அல்லாத வாட்ச் டாக்டர் இரக்க குணம் படைத்தவர் என் வாட்சை வாங்கி தன் கை மருத்துவத்தை ஆரம்பித்தார் சிறிது நேர காத்திருப்புக்கு பிறகு அருகில் இருக்கும் அனைவரும் கைபேசியில் மூழ்கியிருக்க நான் மட்டும் கரையில் நின்றுகொண்டிருந்தேன். அந்த வாட்ச்சிற்கு தேவையான மருத்தவ உபாதைகளை செய்யும் அழகை மறைக்கும் ஒரு வால் க்லாக் யை தள்ளி வைத்துவிட்டு மேலும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தேன் சிறு வயதில் உடைந்த ரிமோட் கார் யை சரி செய்து தரும் நம் அப்பாக்களை மாயாஜால் செய்யும் மேஜிக் மேன் யை போல் வியந்து பாப்போம் அல்லவா, அப்படி தான் இதுவும் இருந்தது. தீவிர சிகிச்சைக்கு பிறகு என் மணிக்கட்டின் காதலியான என் வாட்சை உயிர்ப்பித்து தந்தார் நான் வாட்சை அணிந்த போது இருவரும் தீரா அன்புடன் அணைத்து கொண்டனர்.
வீட்டிற்கு திரும்பிய போது
"என்னடா தாடியும் முடியுமா பெரிய ஆள் மாறி ஆயிட்ட" என்று என் அம்மா சொன்ன வார்த்தைகள், டீனேஜ் யை கடந்து விட போகிறோமே என்ற சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் வாட்ச் சர்வீஸ் கடையில் நான் அடைந்த ஆசுவாசம் சட்டென மனதில் தழுவிச் சென்றது. என் வாட்சை மட்டுமல்லாது எனக்குள் இருக்கும் குழந்தையையும் உயிர் தெழ வைத்த வாடச் டாக்டர்க்கு என் நன்றிகள்!!
KGISL கல்லூரி எதிரே உள்ள சுவிஸ் டைம் வாட்ச் கடை உரிமையாளர் - சூர்யா