90’s கிட்ஸ் தீபாவளி.!
90’s கிட்ஸ் தீபாவளி.!
நரகாசுரன் என்ற தமிழனை கொன்றநாள் தான் தீபாவளியாக கொண்டாப்படுகிறது (உண்மையோ பொய்யோ அதெல்லாம் தெரியாது) என்ற புரிதலும் வெறுப்பும் இல்லாமல் குதுகலத்துடன் போனது தான் 90’sகிட்ஸ் தீபாவளி!
ஏரியால இருக்கிற மாரி அண்ணே கடையில ஒருமாசத்துக்கு முன்னாடியே வாங்கிபோடுற சீனி வெடியும் ரோல்டேப்பும் பொட்டுகேப்பு பாம்புமாத்திரயும் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் தொடங்குறது 90’sகிட்ஸ் தீபாவளி. வருசத்துக்கு ஒரு நாள் மட்டும் தான் புது ட்ரெஸ் எடுக்குற கொண்டாட்ட நாள் தான் 90'sகிட்ஸ் தீபாவளி.!!
ரெடிமேட் ட்ரெஸ் எடுக்குறவிங்க கூட தப்பிச்சுருவாய்ங்க பாவத்த குண்டா இருந்துட்டு ரெடிமேட் ல சைஸ் கிடைக்காம துணி எடுத்து ஒரு மாசத்துக்கு முன்னாடியே தைக்க கொடுத்து பேண்ட் கீழ(bottom zip) ஜிப் வைங்க ணே, சட்டைல v மாடல் வைங்க ணு சொன்னதுலா கரக்டா வைப்பாய்ங்களா இல்லையானு பதட்டத்துலயே வச்சுருப்பாய்ங்க., தீபாவளிக்கு முன்னாடிநாள் தச்சு வந்த ட்ரெஸ போட்டு பாத்தா தான் உசுரே வரும். முன்னாடி நாள் நைட்ல இருந்து ஒரே ஒரு வெடி பாக்ஸ்கு தூங்காம ஒக்காந்து அடுத்த நாள் காலை ல பிரிச்சு பாத்து சீனி வெடில ஆரமிப்போம்னு பத்திய எடுத்துட்டு போகும் போது பிடுச்சு ஒக்கார வச்சு இட்லியும் கறி கொழம்பும் வீட்ல சுட்ட பலகாரம் பக்கத்து வீட்டு பலகாரத்தயும் தின்ன வைப்பாய்ங்க.
வெடிய கைல பிடுச்சு தூக்கிப்போட்டு அலும்ப கொடுப்போம்னு நெனச்சு வெளிய வரும்போது ஏரியா பிள்ளைங்க எல்லாம் தூங்க போய்ருவாய்ங்க.
அணுகுண்டையும் சரஸ்வதி வெடியும் சாணிக்குள்ள வெடிக்க வைக்குறது, வெங்காய வெடிய பக்கத்து வீட்டு செவத்துல எறியுறது முக்கியமான விசயம் வெங்காய வெடி வாங்குறது அவ்வளவு ஈசி இல்ல., உருண்ட ணு கோட் வேர்டு சொல்லி வீட்டுக்கு தெரியாம வாங்கணும் எல்லா வெடிகடைலையும் அது கிடைக்காது., கடைய கண்டுபிடிச்சு வாங்கிட்டா அவனுக்கு தான் அன்னைக்கு தீபாவளி.
K TVல 2.30மணி நேர படத்த விளம்பரத்தோட சேர்த்து 4மணி நேரம் பொறுமையா பாப்போம்.
7சாட் வெடிய சைடு ல தட்டிவிட்டு எவன் காலுக்குள்ளயாது வெடிக்க வைக்கிறது. ஒரே ஒரு கிப்ட் பாக்ஸ நைட் வர வச்சு வெடிச்சுட்டு கொஞ்ச வெடிய கார்த்திகைக்கு வெடிப்போம் ணு எடுத்து வச்சுட்டு மொட்டமாடில போய் ஆத்துக்கு அந்தபக்கம் (வானத்துல வெடிக்கிற வெடியவே சீனி வெடி மாதிரி அசால்டா வெடிக்ற அண்ணாநகர் பகுதி) மேல போற பேன்சி வெடிய வேடிக்கைபாக்குறதோட முடியல எங்க 90’sகிட்ஸ் தீபாவளி , அடுத்தநாள் புது ட்ரெஸ் ஓட ஸ்கூல்-கு தோரணயா போய் அடுத்த தீபாவளிக்கு எப்டி ட்ரெஸ் எடுக்கலாம் ஏ.கே அஹ்மத் ஆ? காபா வா? ஓம் முருகாஸா..? ஒரு விவாதம் நடக்கும். அந்த நாள் முதல் அடுத்த தீபாவளிக்காக காத்திருப்போம்.